-இளங்குமரன் எம்.பி-
-க.சபேஷன்-
மாகாண சபைத் தேர்தலை மிக விரைவில் நடாத்தியே தீருவோம் என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் நேற்று வெள்ளிக்கிழமை ஊடகங்களுக்கு அவர் கருத்து வெளியிடுகையிலேயே மெற்கண்டவாறு குறிப்பிட்டு மேலும் தெரிவிக்கையில்:
மாகாண சபை தேர்தல் சட்ட மூலம் இன்னும் தயாரிக்கப்படவில்லை. அதனை மிக விரைவில் இயற்றி தேர்தலை நடாத்துவதற்கே இருக்கிறோம்.
எந்தவொரு தேர்தலையும் எமது தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பிற்போடமாட்டாது.
எம்மால் சட்ட மூலங்களை மிக எளிதாக நிறைவேற்றமுடியும். நாடாளுமன்றில் நாங்கள் பெரும்பான்மையாக இருக்கிறோம். அதற்காக சர்வாதிகாரமாக நடந்து கொள்ள மாட்டோம். ஜனநாயக முறைப்படியே நடந்து கொள்வோம். மக்களின் கருத்துக்களை கேட்டே மாகாண சபை சட்டமூலம் தாயாரிக்கப்படும்;.
ஜெ. ஆர் செய்தது போல நாடாளுமன்றில் பெரும்பான்மை இருக்கிறது என்பதற்காக தான்தோன்றி தனமாக சட்டங்களை இயற்றமாட்டோம். மக்களின் கருத்துக்களை கேட்டு , மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட சட்ட மூலங்களையே நாடாளுமன்றில் நிறைவேற்றுவோம் என மேலும் தெரிவித்தார்.


















