-த.சுபேசன்-
பால்நிலை சமத்துவம்,பாலியல் மற்றும் இனப்பெருக்க சுகாதார உரிமைகள் குறித்த புரிதலின் ஊடாக சமாதானம் மற்றும் சமூக ஒருமைப்பாட்டினை ஏற்படுத்தும் நோக்கோடு இளம் விவசாயிகள்,கடற்தொழிலாளர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்களுக்கான இரு நாள் செயலமர்வின் ஆரம்ப நிகழ்வு நேற்று யாழ்.நகரிலுள்ள தனியார் விடுதியில் நேற்று காலை இடம்பெற்றது.
ஜெசாக் மற்றும் ஏ.டி.ரி நிறுவனங்களின் கூட்டிணைவோடு ஐ.என்.ஓ மற்றும் யு.என்.எவ்.பி.ஏ நிறுவனங்களுடைய நிதிப்பங்களிப்பில் இடம்பெற்ற மேற்படி இருநாள் செயலமர்வில் பிரதம விருந்தினராக வடக்கு மாகாண விவசாயம் மற்றும் மீன்பிடித்துறை அமைச்சின் செயலாளர் ச.சிவஸ்ரீ கலந்துகொண்டார்.

















