-தமிழ்த் தேசியத்தை அழிப்பதே இவர்களின் இலக்கு-
-இ.கலைஅமுதன்-
சிறீதரன் எம்.பியின் பதவியை நீக்கப் போவதாக தமிழரசுக் கட்சி எடுத்துள்ள தீர்மானம் கொடுமையானது என்று தெரிவித்துள்ள மறவன்புலோ சச்சிதானந்தம், உண்மையிலேயே கட்சியில் இருந்து நீக்கப்பட வேண்டியவர்கள் கொலைக்குற்றவாளியான சி.வி.கே.சிவஞானம், தமிழ் தேசியத்தின் துரோகியான எம்.ஏ.சுமந்திரனுமே என்று தெரிவித்தார்.
யாழ்.ஊடக அமையத்தில் நேற்று திங்கட்கிழமை நடந்த ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும் போது இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் தெரிவிக்கையில்:-
இலங்கை தமிழரசுக் கட்சி கடந்த 12 ஆண்டுகளாக பல உறுப்பினர்களை நீக்கிவிட்டது. இதற்கு அடித்தளமாக இருந்தவர் சிறிஸ்தவ பாதிரியார் சுமந்திரன். மிதடிஸ்த திருச்சபையின் அங்கமாக தமிழரசுக் கட்சியினை கொண்டுவர வேண்டும் என்ற நோக்கத்தோடு சுமந்திரன் தமிழரசின் தூண்களை விலக்கிவிட்டார்.
நேற்று முன்தினம் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரனையும் நீக்கப் போகிறோம் என்ற கருத்தை வெளியிட்டிருக்கின்றார்கள். உண்மையிலேயே நீக்கப்பட வேண்டியவர்கள் சுமந்திரனும், சி.வி.கே.சிவஞானமும் தான்.
தமிழரசுக் கட்சி தொடங்கள் 75 ஆண்டுகளுக்கு மேல் ஆகின்றது. 2015 ஆம் ஆண்டுக்குப் பின்னரே அதிகளவானவர்கள் கட்சியில் இருந்த நீக்கப்பட்டுள்ளார்கள். அரியநேந்திரன், தவராசா, அனந்தி சசிதரன், சரவணபவன், சிவகரன், அருந்தவபாலன், விமலேஸ்வரி, இராஜேந்திரன், நாவலன், குணாலன் ஆகியோர் குறிப்பிட்ட காலத்திற்குள் நீக்கப்பட்டார்கள்.
தமிழர்களுக்காக பேசுபவர்களை நீக்கி, தமிழரசு கட்சியினை ஒரு மலட்டுத்தன்மையுடன் கட்சியாகவும், கிறிஸ்தவ சபையாக மாற்றும் நோக்கத்தோடும் சுமந்திரன் செயற்பட்டு வருகின்றார். மேதடிஸ்த திருச்சபையின் மேலதிக ஆயர்தான் சுமந்திரன். அவர் ஒரு பாதிரியார். ஆவருடைய மனைவி இலங்கை உட்பட 10 நாடுகளுக்காகன மதமாற்ற சபையின் செயலாளர். இதற்கான அவர்களுக்கு கோடிக்கணக்கில் பணம் வருகின்றது.
தமிழ்த்; தேசியம் பேசுபவர்களையும், தமிழரசின் தூண்களாக இருந்தவர்கள் எல்லோரையும் தட்டித் தட்டி தரைமட்டமாக்கி தமிழரசுக் கட்சியியை உடைத்தெறியும் நடவடிக்கையையே தற்போது சுமந்திரன் மேற்கொள்ளுகின்றார்.
நேற்று முன்தினம் அவர்கள் எடுத்த தீர்மானம் கொடுமையான தீர்மானம். அதிக வாக்கால் வெற்றி பெற்ற பாராளுமன்ற உறுப்பினரை நீக்கிவிட்டு அந்த இடத்திற்கு சுமந்திரன் நுழையப் பார்க்கின்றாரா? இந்த விடயங்களுக்கு துணைபோகின்றவர்கள் அயோக்கியர்கள்.
4 ஆவது அனைத்துலக தமிழாராட்சி மாநாடு நடந்த போது 11 பேர் உயிரிழந்தார்கள். அதில் 9 பேர் வீரசிங்கம் மண்டபம் முன் உயிரிழந்தார்கள். இதற்கு யார் காரணம்? நான் அப்போது ஆராச்சி மாநாட்டு குழுவில் இருந்திருந்தேன்.
மாநாட்டை நடத்துவதற்கு திறந்தவெளி அரங்கை தருமாறு யாழ்.மாநகர சபையில் விண்ணப்பித்தோம். தரமுடியாது என்று சி.வி.கே சிவஞானம் ஆயோக்கியத்தனமாக கூறியிருந்தார். இதனால்தான் வீரசிங்கம் மண்டபத்தில் மாநாட்டை நடத்தினோம்.
50 ஆயிரம் மக்களை அந்த மண்டபத்தில் அடக்க முடியுமா? சிந்தித்திருக்க வேண்டாமா சி.வி.கே சிவஞானம். இந்த அயோக்கித்தனம் செய்தவர்கள் தான் இன்று தமிழரசுக் கட்சிக்கு தலைமை தாங்குகின்றார்கள்.
உண்மையிலேயே கட்சியில் இருந்து நீக்கப்படவேண்டியவர்கள், சி.வி.கே சிவஞானமும், சுமந்திரனும் ஒழிய மற்றவர்கள் அல்ல. ஏனைய எல்லோரையும் சேர்த்துக் கொண்டு, சி.வி.கே, சுமந்திரனை நீக்கி தமிழரசுக் கட்சயை முன்கொண்டு செல்ல வேண்டும் என்றார்.
குற்றச்சாட்டுக்கள் எல்லோர் மீதும் உள்ளது. சிறிதரன் மீது மட்டும்தான் குற்றச்சாட்டு உள்ளதா? ஏன் சுமந்திரன் மீது இல்லையா? சி.வி.கே சிவஞானம் மீது நான் கூறும் குற்றச்சாட்டால் அவர் பொது வாழ்க்கைக்கே வர முடியாது என்றார்.


















