-இரத்மலானையில் அமைப்பு –
இரத்மலானை தொழில்நுட்ப பயிற்சி நிலையத்தில் அதிநவீன தொழில்நுட்பங்களுடனான ரயில் ஓட்டுநர் பயிற்சி மையம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதியமைச்சர் பிரசன்ன குணசேன நேற்று அங்கு நேரில் விஜயம் செய்து செயற்பாடுகளை பார்வையிட்டுள்ளார். புதிய தொழில்நுட்ப உபகரணங்கள் மற்றும் தொழில்நுட்ப அறிவைக் கொண்ட இந்த தொழில்நுட்ப மையம் புதிதாக நியமிக்கப்பட்ட ரயில் ஓட்டுநர்களுக்கு உடனடி பயிற்சி அளிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ளது.
1.1 மில்லியன் யூரோ செலவில் அமைக்கப்பட்ட இந்த பயிற்சி மையம் பல வசதிகளைக் கொண்டுள்ளது. இதில் ரயில்களை நேரடியாக கையாளுதல், ரயில் சிக்னல்களைப் பெறுதல், குறுக்கு வழிகளை எவ்வாறு கையாள்வது மற்றும் பயன்படுத்துவது போன்ற அதிகபட்ச அனுபவத்திற்கு 3னு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் இந்த மையத்தில் பயிற்சியை மேற்கொள்வது சிறப்பம்சமாகும்.


















