ஆளுகை, பொருளாதார மாற்றம் மற்றும் பொதுக் கொள்கை மறுசீரமைப்பு குறித்து விரிவான கலந்துரையாடல்களை முன்னெடுப்பதை நோக்கமாகக் கொண்டு, சிங்கப்பூருக்கு ஆய்வுச் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நேற்று செவ்வாய்க்கிழமை சிங்கப்பூரின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் ஜார்ஜ் இயோ-யோங்-பூனைச் சந்தித்தார்.
சிங்கப்பூரில் அமைந்துள்ள லீ குவான் யூ பொதுக் கொள்கைகள் கற்கைகள் நிறுவகத்திலேயே இச்சந்திப்பு இடம்பெற்றது.
முற்போக்கான தலைமைத்துவம், வலுவான நிறுவனங்கள் மற்றும் சான்றுகளின் அடிப்படையிலான கொள்கை உருவாக்கம் மூலம் செயற்கை நுண்ணறிவு, ஆட்டோமேஷன் மற்றும் மேம்பட்ட உற்பத்தி ஆகியவற்றின் தாக்கம் உள்ளிட்ட முக்கிய உலகளாவிய தொழில்நுட்ப மற்றும் பொருளாதார மாற்றங்களுக்கு சிங்கப்பூர் எவ்வாறு வெற்றிகரமாகத் தகவமைத்துக் கொண்டது என்பது குறித்து இந்த கலந்துரையாடலில் இருதரப்பினரும் பிரதானமாக கவனம் செலுத்தினர்.
தனிப்பட்ட பிம்பத்தின் மீது மட்டும் சார்ந்து இல்லாமல் ஈடுகொடுக்கும் கட்டமைப்புகள் மற்றும் பொறிமுறையாள்கைகளை உருவாக்குவதில் சிங்கப்பூரின் அனுபவங்களிலிருந்து நாட்டிற்கு பாடங்கள் கற்பதன் முக்கியத்துவத்தை எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச இங்கு வலியுறுத்தினார்.


















