-கற்கோவளத்தில் பயங்கரம்-
-சி.ஜெகதீஸ்வரன்-
பருத்தித்துறை – கற்கோவளம் பகுதியில் வீடு புகுந்து மர்மநபர் நடத்திய வாள்வெட்டு தாக்குதலில் குடும்பஸ்தர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
நேற்று அதிகாலை 1 மணியளவில் இடம்பெற்ற இந்த தாக்குதல் சம்பவத்தில் அதே பகுதியை சேர்ந்த சோமசுந்தரம் கங்காதரன் (வயது51) என்பவரே படுகாயமடைந்தார்.
அதிகாலை 1 மணியளவில் வீட்டின் பின் கதவால் உள்நுழைந்த இனந்தெரியாத மர்மநபர் ஒருவர் வாள் வெட்டுத் தாக்குதலை நடத்தியுள்ளதாக கூறப்படுகின்றது.
இந்த சம்பவம் தொடர்பாக பருத்தித்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.


















