-த.சுபேசன்-
குரலோசை நுண்கலைகளின் தாயகம் நடாத்திய முத்தமிழ் பெருவிழாவின் இறுதிநாள் நிகழ்வு கோப்பாய் ஆசிரியர் பயிற்சி கலாசாலையில் நேற்று முன்தினம் புதன்கிழமை இரவு இடம்பெற்றது.
புதுமை வலைத் தொலைக்காட்சியின் இயக்குநர் ஈளங்கீரனின் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் தண்ணுமை வேந்தன் மா.சிதம்பரநாதன் முதன்மை விருந்தினராக கலந்து சிறப்பித்தார். நிகழ்வில் அரியாலை ஏழிசை மிருதங்க நர்த்தனாலய மாணவர்களின் பரத நிகழ்வு , ‘வானமே சாட்சியாய்..’ என்ற தலைப்பில் கவியரங்கம் இடம்பெற்றது.


















