-அன்ரனி திலக்-
வடமராட்சி கிழக்கு மருதங்கேணி இ.த.க. வித்தியாலய மாணவர்களுக்கு கற்றல் மற்றும் விளையாட்டு உபகரணங்கள் நேற்று வழங்கப்பட்டன.
சுவிட்ஸர்லாந்து நாட்டில் வசிக்கும் மயில்வாகனம் சிறிதர்மராசா என்பவரால் அவரது தங்கையான அமரர் மயில்வாகனம் கன்னிகாராணி நினைவாக பல இலட்சம் ரூபா பெறுமதியான கற்றல் உபகரணங்கள மற்றும் விளையாட்டு உபகரணங்கள் வழங்;கப்பட்டன.
தரம் ஒன்று முதல் தரம் 6 வரையான மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள்,விளையாட்டு உபகரணங்கள் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்திபெற்ற மாணவர்களுக்கான நிதி போன்ற பல உதவிகள் வழங்கப்பட்டன. பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் புலம்பெயர் தேசத்தில் இருந்து தாயகத்தில் பல நலத்திட்ட உதவிகளை செய்துவரும் மயில்வாகனம் சிறிதர்மராசா மற்றும் அவரது துணைவியாருக்கு பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டதுடன் நினைவுச் சின்னமும் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் ஆசிரியர்கள், மாணவர்கள், பழைய மாணவர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.


















