-சி.ஜெகதீஸ்வரன்-
பருத்தித்துறை நகரின் பொது இடத்தில் திண்மக் கழிவு கொட்டியவருக்கு எச்சரிக்கையுடன் பத்தாயிரம் ரூபா தண்டம் விதிக்கப்பட்டது.
பருத்தித்துறை நகரசபையின் ஆளுகைக்குட்பட்ட பிரதேசங்களில் பொது இடங்களில் திண்மக்கழிவுகள் கொட்டப்படுவதனை தடுக்கும் முகமாக அதிகளவில் கழிவுகள் கொட்டப்படுகின்ற பொது இடங்களை அடையாளப்படுத்தி கண்காணிப்பு கமராக்கள் பொருத்தப்பட்டு அவதானிக்கப்பட்டது.
இதன்போது பருத்தித்துறை நகரசபையின் எல்லைக்குட்பட்ட அம்புலி ஓடை வீதியில் திண்மக்கழிவுகளை எறிந்து சென்றவர் இனங்காணப்பட்டு, அவருக்கு எதிராக பருத்தித்துறை நகரசபையின் பொதுச்சுகாதார பரிசோதகர் ப. தினேஷினால் நேற்று வெள்ளிக்கிழமை பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. விசாரணையின் பின் கடுமையான எச்சரிக்கையுடன் நீதிமன்றினால் 10,000 ரூபா தண்டம் விதிக்கப்பட்டது.


















