-அவர் இல்லாத காலத்தில் நிலைமை தலைகீழ்-
விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் இருந்த காலத்தில் வடக்கில் போதைப் பொருள் மற்றும் துஷ;பிரயோக சம்பவங்கள் நடந்ததில்லை. ஆனால், இன்று நிலைமை தலைகீழாக மாறியிருக்கின்றது. எனக் கூறியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் இராதாகிருஷ;ணன், தண்டனைகள் கடுமையானால் தான் குற்றங்கள் குறையும் எனவும் கூறினார்.
பாராளுமன்றத்தில் நேற்று நஞ்சுகள், அபின் மற்றும் அபாயகரமான ஒளடதங்கள் (திருத்தச்) சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு கூறினார். இதன்போது மேலும் அவர் கூறுகையில், போதை ஒழிப்பு தொடர்பான சட்டமூலத்திற்கு நாம் பூரண ஆதரவை வழங்குவோம்.
இது தொடர்பில் அதிகபட்ச தண்டனையை வழங்கி இதனை கட்டுப்படுத்த வேண்டும் என்பதே எங்களின் கருத்தாக உள்ளது. வடக்கு மற்றும் கிழக்கை எடுத்துக்கொண்டால் பிரபாகரன் இருந்த காலத்தில் அங்கு போதைப் பொருள் பாவனையோ, துஷ;பிரயோகங்களோ இருந்ததே இல்லை.
ஆனால் இப்போது நிலைமை தலைகீழாக காணப்படுகிறது. சட்டம் ஒழுங்கு முறையாக செயற்படாமையால் போதைப்பொருள் பாவனை தீவிரமடைந்துள்ளது. போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்த ஜனாதிபதி நடவடிக்கை எடுத்து வருகின்றார். இது பாராட்டத்தக்க விடயம்.
இஸ்லாமிய நாடுகளில் போதைப்பொருள், துஸ்பிரயோகங்கள் போன்ற குற்றங்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்படுகின்றன. அந்த சட்டங்களை இங்கு அமுல்படுத்த வேண்டும். தண்டனைகள் கடுமையானால் தான் குற்றங்கள் குறையும் என்றார்.
















