யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 40 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவில் சுன்னாகம் வாழ்வகத்தை சேர்ந்த விழிப்புலனற்ற மாணவர்களான துரைராசா அருண்குமார், சிவபாதசுந்தரம் அனந்தினி ஆகியோர் பொதுக் கலைமாணிப் பட்டத்தினைப் பெற்றுக்கொண்டனர்.
பார்வை இழந்தும், கல்வியில் சாதிக்க வேண்டும் என்ற அவாவில் கல்வி பயின்று, பட்டம் பெற்ற இவர்களை பலரும் பாராட்டி வருகின்றனர்.


















