-நயினாதீவில் நேற்று பயங்கர சம்பவம்-
-க.சபேஷன்-
நயினாதீவில் இரு பூசாரிகளுக்கிடையே ஏற்பட்ட தகராறில் ஒருவர் வாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
நேற்று திங்கட்கிழமை நடந்த இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது:-
நயினாதீவு வீரகத்தி விநாயகர் ஆலய பூசகருக்கும், நயினாதீவுக்கு தொழில் நிமித்தம் சென்றிருந்த மற்றுமொரு பூசாரிக்கும் இடையில் தொழில் ரீதியான தகராறு இருந்து வந்தது.
இந்தத் தகறாறு முற்றி நேற்று ஒருவருடன் ஒருவர் மோதிக் கொண்ட போதே ஒருவர் வாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
இச்சம்பவத்தில் நயினாதீவு வீரகத்தி விநாயகர் ஆலய பூசகரது வாள் வெட்டிலேயே மற்றைய பூசாரி பலியாகியுள்ளதாக ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்தனர்.


















