யாழ்ப்பாணம் குறிகாட்டுவான் இறக்குதுறையை புனரமைப்பதற்கான ஒப்பந்தத்தை மெஸ் ஸர்ஸ் ஆர்.ஆர் கட்டுமான நிறுவனத்திற்கு வழங்க அமைச்சரவை ஒப்புதலளித்துள்ளது.
குறிகாட்டுவான் இறங்குதுறையை புனரமைப்பதற்கு கடந்த 21.10.2025ம் திகதி அமைச்சரவை ஒப்புதல் வழங்கியிருந்தது.
தேசிய போட்டி கொள்முதல் முறையின்படி இந்தக் கொள்முதலுக்காக ஏலங்கள் கோரப்பட்டு, 5 ஏலங்கள் பெறப்பட்டுள்ளன. மேற்கூறிய ஏலங்களின் மதிப்பீட்டைத் தொடர்ந்து, உயர்நிலைக் கொள்முதல் குழு சமர்ப்பித்த பரிந்துரைகளின் அடிப்படையில், மெஸ்ஸர்ஸ் ஆர்.ஆர். கன்ஸ்ட்ரக்ஷன் (பிரைவேட்) லிமிடெட் நிறுவனத்திற்கு ரூ.984.73 மில்லியன் (வரி நீங்கலாக) தொகைக்கு மேற்கூறிய ஒப்பந்தத்தை வழங்குவதற்காக, போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சர் சமர்ப்பித்த முன்மொழிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.


















