ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் கைது செய்யப்பட்ட முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொடவை பிணையில் செல்ல அனுமதித்து கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரிகள் மற்றும் சந்தேகநபர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் முன்வைத்த சமர்ப்பணங்களை பரிசீலித்த பின்னரே, கொழும்பு பிரதான நீதவான் அஸங்க எஸ். போதரகம இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷவை இலங்கை கடற்படையில் இணைத்துக்கொண்டு பிரித்தானிய கடற்படை அகடமியில் பயிற்சிக்கு அனுப்பியமை தொடர்பில், தொடர்பில் அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணைகளுக்காக முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட இன்று (03) முற்பகல் 10.05 மணியளவில் இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டிருந்தார்.
இதன்போது விசாரணை அதிகாரிகளினால் ஆணைக்குழு வளாகத்தில் வைத்து கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
















