யாழ்ப்பாணம் – நேற்று நல்லூர் வளாகத்திற்குள் முச்சக்கரவண்டி ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்த நிலையில், அப்பகுதியில் இருந்த பொதுமக்களின் உடனடி முயற்சியால் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட முச்சக்கரவண்டி சாரதி திரு. கிருபா அவர்களுக்கு நிவாரணம் வழங்கும் நடவடிக்கை இன்று முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது, UBER நிறுவனத்தினால் வழங்கப்பட்ட பகுதி நிவாரணத் தொகை, வடமாகாண உரிமையாளர் திரு. தீசன் அவர்களால் சாரதி திரு. கிருபாவிடம் வழங்கி வைக்கப்பட்டது.
திடீர் தீ விபத்தினால் பாதிக்கப்பட்ட சாரதிக்கு வழங்கப்பட்ட இந்த நிவாரணம், அவரது இழப்பை ஓரளவு ஈடுசெய்யும் வகையில் அமைந்துள்ளது.


















