யுத்தக்களத்தில் சரத் பொன்சேகா பெரும் வீரன். ஆனால் அரசியல் மேடைகளில் ஏறினால் அவைருக்கும் வாயசைக்கும் ‘கூரன்’ போன்றவர் என மொட்டுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இந்திக அனுருத்த தெரிவித்துள்ளார்.
மொட்டுக் கட்சியின் தலைமையகத்தில் இன்று புதன்கிழமை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ 2009 ஜனவரி 31 முதல் பெப்ரவரி 1 வரை யுத்த நிறுத்தமொன்றை அறிவித்ததாக முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா சொன்ன கருத்துக்கு பதிலளிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
அவரின் குறித்த கருத்து வெறும் கேலிக் கூத்தானதாகும். 48 மணித்தியாலம் போர் நிறுத்தம் வழங்கியிருந்தால் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் தப்பியிருக்கலாம் தானே. அவ்வாறு ஒரு டீல் நடந்திருந்தால் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் மகிந்த உடன் தானே கதைத்திருக்க வேண்டும்.
அப்படியென்றால் அதில் பலனை பிரபாகரன் அனுபவித்திருக்க வேண்டும். இவை கேலிக்குரியதாகும். அரசியலில் அவர் பாவத்திற்குள்ளான ஒரு ‘கூரன்’ போன்றவர்.
இராணுவத் தளபதியாக அவரை நாம் மதிக்கிறோம். அதற்கான மரியாதையை நாம் இன்றும் அவருக்கு வழங்குகிறோம்.
ஆனால் அரசியல் ரீதியில் அவரை நாம் வோறான கோணத்தில் பார்க்கிறோம் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இந்திக்க அனுருத்த தெரிவித்துள்ளார்.


















