யாழ். நீதிபதிகளில் மூவர் மேல் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் மாவட்ட நீதிபதிகளாகவும், நீதவான் நீதிமன்ற நீதிபதிகளாகவும் கடமையாற்றிய ஏ.ஏ.ஆனந்தராஜா, அந்தோனிப்பிள்ளை யூட்சன் மற்றும் கஜநிதிபாலன் ஆகியோரே இவ்வாறு நியமிக்கப்பட்டனர்.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நேற்றைய தினம் ஜனாதிபதி அலுவலகத்தில் குறித்த நியமனக் கடிதங்களை வழங்கிவைத்தார்.


















