மட்டக்களப்பு – ஏறாவூர் ஒட்டுப்பள்ளி குறுக்கு வீதியில் உள்ள பழைய பாடசாலை ஒன்று அமைந்திருந்த காணியில் இருந்து 4 கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.
குறித்த காணியில் ஆயுதங்கள் இருப்பதாக பொலன்னறுவை இராணுவப் புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய குறித்த இடத்தில் இன்று சோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது புதைக்கபட்டிருந்த நிலையில் அடைக்கப்பட்ட வாளியொன்றினுள் இருந்து நான்கு கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ள
இதனைத்தொடர்ந்து மேலும் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இதேவேளை, குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


















