2025 ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசு பெறுவோர் விவரங்கள் திங்கட்கிழமை முதல் அறிவிக்கப்படுகின்றன.
உலக அளவில் மருத்துவம், பௌதிகவியல், இரசாயனவியல், இலக்கியம், பொருளாதாரம், அமைதி ஆகிய துறைகளில் மகத்தான சாதனை படைப்பவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்படுகிறது. நோபல் பரிசு ஒரு பதக்கம், சான்றிதழ் மற்றும் பணப்பரிசு அடங்கியது.

இந்த ஆண்டின் மருத்துவத்துக்கான நோபல் பரிசு 3 பேருக்கு பகிர்ந்தளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. புற நோயெதிர்ப்பு, சகிப்புத்தன்மை தொடர்பான கண்டுபிடிப்புகளுக்காக மேரி இ. பிரன்கோவ், பிரெட் ராம்ஸ்டெல் மற்றும் ஷிமோன் சகாகுச்சி ஆகியோருக்கு 2025 ஆம் ஆண்டின் மருத்துவத்துக்கான நோபல் பரிசு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

















