தற்போது மின் சிகரெட்டுக்களை பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.
சுமார் 15 மில்லியன் சிறுவர்கள் உட்பட 100 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் மின் சிகரெட்டுகளைப் பயன்படுத்துகின்றனர்.
இது நிக்கோடின் எனும் போதைப்பொருளின் புதிய அலையைத் தூண்டுவதாக உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரித்துள்ளது.
உலகளாவிய புள்ளிவிவரங்களின் அடிப்படையில் சிறுவர்கள் சராசரியாக பெரியவர்களை விட 9 மடங்கு அதிகமாக மின் சிகரெட்டுக்களை பயன்படுத்துவதற்கான வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

















