-க.கனகராசா-
நெல்லியடி பொதுச் சுகாதாரப் பிரிவினருக்கு உட்பட்ட பகுதியில் சுகாதார விதிமுறைகளை கடைப்பிடிக்காத உணவகங்கள் மற்றும் சிறப்பு அங்காடி போன்றவற்றிற்கு நேற்று வெள்ளிக்கிழமை பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தினால் 39 ஆயிரம் ரூபா தண்டப் பணம் அறவிடப்பட்டுள்ளது.
கரவெட்டி சுகாதார பணிமனையின் சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் பொதுச் சுகாதார பிரிவினர் நெல்லியடி சுகாதார பிரிவினருக்கு உட்பட்ட பகுதியில் திடீர் சோதனை மேற்கொண்ட நிலையில், இதன் போது காலாவதியான பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்தமை, பூச்சி பிடிக்கக் கூடிய வகையில் பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்தமை மற்றும் பணிபுரிவோர் தொப்பி மற்றும் மருத்துவ சான்றிதழ் இல்லாமல் இருந்தமை போன்ற குற்றச்சாட்டின் பேரில் 2 உணவகங்கள் மற்றும் சிறப்பு அங்காடிகள் போன்றவற்றிற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
வழக்கு விசாரணையின் போது உரிமையாளர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டதன் பேரில் பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தினால் 39 ஆயிரம் ரூபா தண்டப் பணம் அறவிடப்பட்டுள்ளது.


















