இலங்கை வந்துள்ள சீன வர்த்தகர்கள் குழு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை சந்தித்து பேசியுள்ளனர்.
இக்குழுவினர் தங்காலையில் உள்ள முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் இல்லத்துக்கு நேற்றுமுன்தினம் சென்று சந்தித்துள்ளனர்.
இந்த சந்திப்பின் போது முன்னாள் ஜனாதிபதிக்கு பரிசுகளை அக்குழுவினர் வழங்கிய நலம் விசாரித்தனர்.
தேயிலை ஏற்றுமதியில் ஈடுபட்டுள்ள இந்தக் குழு, வெலிகம மற்றும் நுவரெலியாவுக்குச் செல்லும் வழியில் மகிந்த ராஜபக்சவைச் சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் உள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்தை விட்டு வெளியேறி தங்காலையில் குடியேறிய பின்னர் முன்னாள் ஜனாதிபதியை சந்திக்க வந்த முதல் சீன வர்த்தகர்கள் குழு இதுவாகும்.


















