-ஞானத்தமிழ்-
வலிகாமம் தெற்கு சுன்னாகம் பொது நூலகம் தேசிய வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு ‘ மறுமலர்ச்சிக்காக வாசிப்போம்’ எனும் தொனிப் பொருளின் கீழ் பல்வேறு போட்டிகளை நடாத்தவுள்ளது.
இப் போட்டியில் நாளை மறுதினம் புதன்கிழமை காலை 9 முன்பள்ளி மாணவர்களுக்கான திருக்குறள் மனனப் போட்டியும், தரம் 1 மாணவர்களுக்கான சிறுவர் பாடல் போட்டியும், முற்பகல் 10 மணிக்கு தரம் 4 மாணவர்களுக்கான வாசிப்புப் போட்டியும் நடைபெறவுள்ளது.
எதிர்வரும் 23 திகதி வியாழக்கிழமை காலை 9 மணிக்கு தரம் 2 மாணவர்களுக்கான கணணியின் உதவியுடன் வினாவுக்கு விடையளித்தல் போட்டியும் தரம் 3 மாணவர்களுக்கான சொல் உருவாக்கும் போட்டியும் முற்பகல் 10 மணிக்கு தரம் 5 மாணவர்களுக்கான மும்மொழியில் வழங்கப்படும் சொல்லுக்கு கருத்து எழுதுதல் போட்டி மற்றும் தரம் 7 மாணவர்களுக்கான கிரகித்தல் போட்டியும் நடைபெறவுள்ளது.
எதிர்வரும் 24 திகதி வெள்ளிக்கிழமை காலை 9 தரம் மாணவர்களுக்கான சித்திர போட்டியும் தரம் 10 மாணவர்களுக்கான பேச்சு போட்டி மற்றும் தரம் 11 மாணவர்களுக்கான கட்டுரைப் போட்டியும் முற்பகல் 11 தரம் 12 மற்றும் 13 மாணவர்களுக்கான வினாவிடை போட்டியும் நடைபெறவுள்ளது.
எதிர்வரும் 30 ஆம் திகதி வியாழக்கிழமை தரம் 6 மாணவர்களுக்கான ஒட்டுப்புத்தகம் தயாரித்தல் போட்டியும் தரம் 8 மாணவர்களுக்கான புத்தாக்கப் போட்டியும் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


















