-ஞானத்தமிழ்-
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் தமிழ் மொழித்தினம் சங்கமம் நிகழ்வு நாளை மறு தினம் புதன்கிழமை காலை 8 மணிக்கு குமாரசுவாமி மண்டபத்தில் செல்வன் மோ.மதுசன் தலைமையில் அதிபர் இ.செந்தில்மாறன் முன்னிலையில் நடைபெறவுள்ளது.
இந் நிகழ்வில் பழைய மாணவரும் எழுத்தாளரும் மருத்துவ அத்தியாட்சகருமான மருத்துவர்
அ. அரவிந்தன் பிரதம விருந்தினராக கலந்து கொள்ளவுள்ளார்.


















