யாழ்ப்பாணம், கொழும்புத்துறை விபுலாந்தனர் வீதியில் மழை வெள்ளம் தேங்கி நிற்பதால் தாம் சிரமங்களை எதிர்கொள்வதாக அப்பகுதி மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
இது குறித்து அப்பகுதி மக்கள் தெரிவிக்கையில்,
கடந்த சில வருடங்களுக்கு முன்னர் குறித்த வீதியில் வெள்ளம் தேங்கி நிற்காது வழிந்தோடுவதற்கு யாழ்ப்பாண மாநகர சபையின் நிதியில் வெள்ள வாய்க்கால் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இதன் பிரகாரம் கற்கள் உள்ளிட்ட கட்டுமான பொருட்கள் தருவிக்கப்பட்டது. இந் நிலையில்,சில அரசியல்வாதிகளின் அரசியல் நோக்கம் கருதிய செயற்பாட்டினால் பணிகள் நிறுத்தப்பட்டன.
இதையடுத்து வீதியில் இறக்கப்பட்ட கட்டுமான பொருட்கள் மீள ஏற்றப்பட்டு வேறு பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டன.மழை காலங்களில் வீதியில் வெள்ளம் தேங்கி நிற்பதால் நாம் பயணிப்பதில் சிரமங்களை எதிகொண்டு வருகின்றோம்.
இவ்வாறான நிலையில் வெள்ளம் வடிந்தோட ஏதுவாக திட்டங்களை முன்னெடுக்குமாறு யாழ்.மாநகர சபையிடம் கோரிக்கை விடுக்கின்றோம் என்றனர்.


















