-த.சுபேசன்-
தேசிய வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு மீசாலை பொது நூலகத்தினால் சாவகச்சேரி இந்து ஆரம்ப பாடசாலையில் கருத்தமர்வு நேற்று முன் தினம் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது மாணவர்களுக்கு இலக்கு நிர்ணயம் ,தயார்படுத்துதல் , சிறந்த உணவுப் பழக்கவழக்கங்கள், சமுதாய மாற்றம், தொழிநுட்ப பிரழ்வுகள் ஆகியன தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டன.
கருத்தமர்வில் வளவாளர்களாக தென்மராட்சிப் பிரதேச செயலக மனித வள உத்தியோகத்தர்களான திருமதி. நிலாந்தினி மோகனகாந்தன் மற்றும் தீபா கேதீஸ்வரன் ஆகியோர் பங்குபற்றி இருந்தனர்.


















