-கஜிந்தன்-
வடக்கு மாகாண ஆளுநரை இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கத்தின் பிரதிநிதிகள் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர். இந்தக் கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
வடக்கு மாகாணத்தின் கல்வி அபிவிருத்தி தொடர்பிலான முன்மொழிவு இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்க பிரதிநிதிகளால் ஆளுநரிடம் கையளிக்கப்பட்டது.
அத்துடன் ஆசிரிய ஆளணி சீராக்கம் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது. ஆசிரியர்கள் தொடர்பான தரவுகள் அதிகாரிகளிடம் இற்றைப்படுத்தப்பட்ட நிலையில் காணப்படாமை பல்வேறு பிரச்சினைகளுக்கு காரணமாக இருக்கின்றது என்றும் சுட்டிக்காட்டப்பட்டது. அண்மையில் மேற்கொள்ளப்பட்ட இடமாற்றம் தொடர்பிலும் பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டது.


















