-த.அம்பிகாவதி-
சண்டிலிப்பாய் பிரதேச சனசமூக மத்தியஸ்த பயிற்சி நெறிக்கு தெரிவு செய்யப்பட்டோருக்கான மத்தியஸ்த திறமைகள் மற்றும் உபாயமார்க்கங்கள் பற்றிய பயிற்சிநெறி கடந்த 13 ஆம் திகதி தொடக்கம் 17 ஆம் திகதி வரை சண்டிலிப்பாய் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
பிரதேச செயலர் கு.பிரபாகரமூர்த்தி தலைமையில் நடைபெற்ற மேற்படி பயிற்சி நெறியில் வளவாளராக யாழ். மாவட்ட மத்தியஸ்த பயிற்சி உத்தியோகத்தர் ப.சனாதனன் கலந்து கொண்டார். அத்துடன் மேற்படி பிரதேச செயலக நிர்வாகக் கிராம அலுவலரும் மத்தியஸ்தம் தொடர்பான கருத்துக்களை வழங்கினார்.


















