-த.சுபேசன்-
சாவகச்சேரி, சிலுவம் செல்வவிநாயகர் சனசமூக நிலையத்தில் அமைக்கப்பட்ட திருவள்ளுவர் திருவுருவச் சிலை அண்மையில் திரை நீக்கம் செய்து வைக்கப்பட்டது.
சனசமூக நிலையத்தின் தலைவர் க.விஜயவாசன் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் சாவகச்சேரி நகராட்சி மன்ற சனசமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் ஜெகதீஸ்வரன் செல்வராணி, நகரசபை உறுப்பினர் கனகசபை கஜீதன் பிரதேச மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
அமரர்களான அதிபர் கோவிந்தபிள்ளை மற்றும் கோ.இராசநாயகம் ஆகியோரின் ஞாபகார்த்தமாக அவர்களுடைய மகன் கோ.சிறிகாந்தனால் திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


















