-த.சுபேசன்-
கடந்த செப்ரெம்பர் மாதம் 25 ஆம் திகதி சாவகச்சேரியில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த திலகீஸ்வரன் யதுஸ்சனின் 21 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு அவரது தொழில்துறை நண்பர்கள் மற்றும் போராளிகள் நலன்புரி சங்கத்தினர் ஆகியோர் இணைந்து தென்மராட்சிப் பகுதியில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களை வழங்கியுள்ளனர்.
சாவகச்சேரி பிரதேச சபை உறுப்பினர் மயூரன் தலைமையில் சாவகச்சேரி நகராட்சி மன்ற பொன்விழா மண்டபத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் விபத்தில் உயிரிழந்த யதுஸ்சனின் தந்தையார் நினைவுச்சுடர் ஏற்றி வைத்ததைத் தொடர்ந்து ஆத்மசாந்திப் பிரார்த்தனை இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து கற்றல் உபகரணங்கள் வழங்;கப்பட்டன.
நிகழ்வில் சாவகச்சேரி நகரபிதா வ. ஸ்ரீபிரகாஸ், நகரசபை உறுப்பினர் மு,கோகுல்ராஜ், போராளிகள் நலன்புரிச் சங்கத் தலைவர் ஈஸ்வரன், சாவகச்சேரி பிரதேசசபை உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டு இளைஞனின் ஆத்ம சாந்திக்காக அஞ்சலி செலுத்தியிருந்தனர்.


















