-த.அம்பிகாவதி-
சர்வதேச முதியோர் தினத்தை முன்னிட்டு சமூக சேவைகள் திணைக்களத்தால் முதியோர்களுக்கிடையே மாவட்ட மட்டத்தில் நடாத்தப்பட்ட பொது அறிவுத் தேர்வில் முதலாம் இடத்தைப் பெற்றமைக்கான விருது கரவெட்டி பிரதேச செயலர் பிரிவைச் சேர்ந்த கிருஷ்ணபிள்ளை ரவிகுமாருக்கு வழங்கப்பட்டுள்ளது.
மேற்படி விருது புத்தூர் சோமாஸ்கந்த கல்லூரியில் அண்மையில் நடைபெற்ற சர்வதேச சிறுவர், முதியோர் தினவிழாவில் வைத்து வழங்கப்பட்டது. இவர் கரவெட்டி பிரதேச செயலக ஓய்வுநிலை நிர்வாக கிராம அலுவலர் ஆவார்.


















