-செ.ரவிசாந்-
யாழ்ப்பாணம் போதனா வைத்தியாசாலையில் ஏற்பட்டுள்ள குருதித் தட்டுப்பாட்டைக் கருத்திற் கொண்டு நயினாதீவு மத்திய விளையாட்டுக் கழகம் இரண்டாவது தடவையாக நடாத்தும் மாபெரும் இரத்ததான முகாம் நிகழ்வு நாளை மறுதினம் சனிக்கிழமை காலை 8.30 மணி தொடக்கம் பிற்பகல் 1.30 மணி வரை நயினாதீவு பிரதேச வைத்தியசாலையில் இடம்பெறவுள்ளது.
மேற்படி இரத்ததான முகாம் நிகழ்வில் அனைத்துக் குருதிக் கொடையாளர்களையும், ஆர்வலர்களையும் தவறாது கலந்து கொண்டு பங்களிப்பு வழங்குமாறு இரத்ததான முகாம் நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.


















