வடமராட்சி கிழக்கு, செம்பியன் பற்று வடக்கு புனித பிலிப்பு நேரியார் ஆலய முன்றலில் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெற்ற திருப்பலியினையடுத்து வர்த்தக சந்தை இடம்பெற்றது.
இந்த வர்த்தக சந்தை மறைபரப்பு ஞாயிற்றுக்கிழமையை சிறப்பிக்கும் முகமாக செம்பியன் பற்று பங்கின் புனித பிலிப்பு நேரியார் ஆலய ஆன்மீக தொண்டு அமைப்புக்களால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த வர்த்தக சந்தையில் காலை உணவுவகைகள் மற்றும் மரக்கறிகள் பழவகைகள் இறைச்சி வகைகள் எனப் பல்வேறுபட்ட பண்டங்கள் காட்சிப்படுத்தப்பட்டு விற்கப்பட்டன.


















