-செ.ரவிசாந்-
வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும், மல்லாகம் கிராம அபிவிருத்திச் சங்கத்தின் தலைவராகவிருந்து மக்களுக்காக சேவைகள் பல ஆற்றியவருமான மறைந்த சுவாமிநாதன் சிறிபாஸ்கரனின் 26 ஆவது ஆண்டு நினைவு தின நிகழ்வு நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை மல்லாகம் கிராம அபிவிருத்திச் சங்க வளாகத்தில் கிராம அபிவிருத்திச் சங்கத்தின் தலைவர் இளையதம்பி நாகேந்திரன் தலைமையில் நடைபெற்றது.

இதன்போது அவரது உருவச் சிலைக்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த நிகழ்வில் மல்லாகம் கிராம அபிவிருத்திச் சங்க நிர்வாக உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.


















