-சொ.வர்ணன்-
திருநெல்வேலிப் பகுதியில் திருட்டில் ஈடுபட்ட பின்னர் தலைமைவாக இருந்த நபர் ஒருவர் நேற்று செவ்வாய்க்கிழமை மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:-
யாழ். திருநெல்வேலி பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் இரண்டரை மாதங்களுக்கு முன் சுமார் ஒரு இலட்சத்து ஐயாயிரம் ரூபா பெறுமதியான பொருட்களை திருடிச் சென்ற பின் தலைமறைவாகியிருந்தார்.
இவ்வாறு தலைமறைவாகியிருந்தவர் தொடர்பில் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் விசேட புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து அவர் நேற்று திருநெல்வேலிப் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டார்.
அவரிடம் நடத்தப்படும் விசாரணைகள் முடிந்த பின்னர் அவர் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படுவார் என்று பொலிஸார் தகவல் தெரிவித்துள்ளனர்.


















