-சொ.வர்ணன்-
யாழ். நகரப் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட நபரை 72 மணி நேர பொலிஸ் தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது
நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை யாழ். நகரப் பகுதியில் புதிய கார் ஒன்றில் ஹெரோயின் போதைப்பொருளுடன் வர்த்தகர் ஒருவரின் மகன் யாழ்ப்பாண பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
குறித்த நபரை நேற்று செவ்வாய்க்கிழமை யாழ். நீதிமன்றத்தில் முற்படுத்திய போது குறித்த நபரை 72 மணித்தியால பொலிஸ் தடுப்பு காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.


















