-பா.பிரதீபன்-
உலக உணவு தினத்தை முன்னிட்டு இரசாயனப் பாவனையற்ற வீட்டுத்தோட்ட உற்பத்திகளின் கண்காட்சியும், விற்பனையும் நிகழ்வு நேற்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.

பிரதான வீதி புனித மாட்டினார் குரமடம் முன்பாக நேற்று காலை 9.30 மணிக்கு ஆரம்பமான நிகழ்வு பிற்பகல் 2 மணி வரை நடைபெற்றது.
கரித்தாஸ் கியூடெக் நிறுவனத்தின் அனுசரணையுடன் முன்னெடுக்கப்ட்ட இந்த நிகழ்வில் இரசாயனப் பாவனையற்ற வீட்டுத்தோட்ட உற்பத்திப் பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


















