-இ.கலைஅமுதன்-
தமிழ் மக்கள் கூட்டணியின் தலைமைச் செயலகம் யாழ்ப்பாண மாவட்டத்தில் திறந்து வைக்கப்படவுள்ளது.
எதிர்வரும் 3 ஆம் திகதி முற்பகல் 10.30 மணியளவில் இல: 58, இராமநாதன் வீதி, யாழ்ப்பாணம் எனும் முகவரியில் குறித்த அலுவலகம் அக்கட்சியின் செயலாளர் நாயகம் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரனால் திறந்து வைக்கப்படவுள்ளது.
குறித்த நிகழ்வில் கட்சி உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், பொதுமக்கள் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு அக்கட்சியின் உப செயலாளர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் அழைப்பு விடுத்துள்ளார்.
கடந்த 2018 ம் ஆண்டு தமிழ் மக்கள் கூட்டணி எனும் அரசியல் கட்சி வடக்கு மாகாண முன்னாள் முதல்வர் க.வி.விக்னேஸ்வரனால் ஆரம்பிக்கப்பட்டு அரசியல் சமூக செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


















