-சொர்ணலிங்கம் வர்ணன்-
யாழ்.வடமராட்சி கிழக்கு சட்டவிரோத மணல் அகழ்வு அண்மைய நாட்களில் உச்சம் தொட்டுள்ளதாக பிரதேச மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
குடாரப்பு, செம்பியன்பற்று வடக்கு, மற்றும் தெற்கு பகுதிகளில் இந்த சட்டவிரோத மணல் அகழ்வு நட வடிக்கைகள் அதிகரித்துள்ளதாக மக்கள் கூறுகின்றனர்.
குறிப்பாக குடாரப்பு பகுதியில் பகல் வேளையிலேயே அதிகளவு மணல் அகழ்வு இடம்பெற்றுக் கொண் டிருப்பதாகவும் செம்பியன்பற்று பகுதியில் இரவில்,
மணல் அகழ்வு இடம்பெறுவதாகவும் மக்கள் கூறுகின்றனர். மேலும் தாளையடி பகுதியில் பொலிஸ் நிi லயத்திலிருந்து 1 கிலோ மீற்றர் தூரத்திலும்,
மணல் அகழ்வு இடம்பெற்றுவருவதாகவும், கூறியுள்ள மக்கள், மணல் அகழப்பட்ட இடங்கள் பாரிய நீர் தேக்கங்கள்போல் காட்சியளிப்பதாகவும் கூறியுள்ளனர்.
அண்மையில் அமைச்சர்கள், அரச தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் இந்த மணல் அகழ்வு விடயத்திற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என உத்தரவாதம் வழங்கியும்,
எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். சட்டவிரோதமான மண் விநியோக செயற்பாடுகளுக்கு மருதங்கேணி பொலிசார்
தமது கடமைகளை திறன்பட செய்தால் முற்றாக ஒழிக்கலாம் ஆனால் அது நடப்பதாக இல்லை என மக்கள் ஆதங்கம் வெளியிட்டுள்ளனர்.


















