-சொ.வர்ணன்-
தமிழ் மக்கள் கூட்டணி கட்சியின் தலைமை செயலகம் அக்கட்சியின் செயலாளர் நாயகம் நீதியரசர் விக்னேஸ்வரனால் நேற்று திறந்து வைக்கப்பட்டது.
யாழ். மாநகர ஆளுகைக்குள் உள்ள இலக்கம் 58, பொன். இராமநாதன் வீதியில் குறித்த அலுவலகம் திறந்து வைக்கப்பட்டது.
சட்டத்தரணி வி. மணிவண்ணன், எஸ்.சிற்பரன், வ. பார்த்தீபன் உள்ளிட்ட கட்சியின் மத்திய குழு உறுப்பினர்களுடன் மன்னார், வவுனியா மவட்டங்களின் அமைப்பாளர்கள், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், செயற்பாட்டாளர்கள் என பலர் நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.
நிகழ்வின் இறுதியில் கட்சியின் மகளிர் அணியின் ஏற்பாட்டில் பாடசாலை மாணவி ஒருவருக்கு துவிச்சக்கர வண்டி வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


















