–சி.ஜெகதீஸ்வரன்-
யாழ். தினக்குரல் பத்திரிகையின் நெல்லியடி முகவர் செல்வரத்தினம் காலமானார். நெல்லியடியில் உள்ள பத்திரிகை முகவர்களில் ஒருவரான நீக்கிலஸ் ஜோர்ஜ் செல்வரத்தினம் தனது 83 ஆவது வயதில் கடந்த திங்கட்கிழமை காலமானார்.
அன்னார் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக நெல்லியடியில் பத்திரிகை முகவராக செயற்பட்டு வந்திருந்தார்.
அன்னாரின் இறுதி நிகழ்வு நாளை வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் விக்கினேஸ்வரா வீதி, கரவெட்டி தெற்கில் உள்ள அன்னாரின் இல்லத்தில் இடம்பெற்று மாதா கோவிலில் திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டு, கீரிப்பல்லி சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.


















