-கரூரில் பலியானோருக்கு அஞ்சலி-
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தலைமையில், அக்கட்சியின் சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் நேற்று புதன்கிழமை நடைபெற்றது.
பொதுக்குழுக் கூட்டம் தொடங்கியவுடன் கரூர் கூட்ட நெரிசலில் பலியான 41 பேருக்கு த.வெ.க. நிர்வாகிகள் எழுந்து நின்று மௌன அஞ்சலி செலுத்தினர்.
த.வெ.க தலைவர் விஜய் தலைமையில் சிறப்பு பொதுக்குழுக் கூட்டம், மாமல்லபுரத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் என 2,000க்கும் அதிகமானோர் கலந்துகொண்டுள்ளனர்.
கரூர் சம்பவத்துக்குப் பின், விஜய் எந்தவொரு பொதுநிகழ்ச்சியிலும் கலந்துகொள்ளாமல் இருந்த நிலையில், நேற்று சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது.


















