-ஞானத்தமிழ்-
கோப்பாய் பிரதேச கலாசார அதிகார சபை, கோப்பாய் பிரதேச செயலகம் ஆகியன கலாசார அலுவல்கள் திணைக்களத்துடன் இணைந்து நடாத்தும் கலை இலக்கிய விழா எதிர்வரும் 9 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு கோப்பாய் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் பிரதேச கலாசார அதிகார சபைத் தலைவரும் பிரதேச செயலாளருமான ஈ.தயாரூபன் தலைமையில் இடம்பெறவுள்ளது.
இந்நிகழ்வில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக உயர் பட்டப் படிப்புக்கள் பீடாதிபதி போராசிரியர் தி.வேல்நம்பி பிரதம விருந்தினராகவும் யாழ். மாவட்ட செயலக கலாசார உத்தியோகாத்தர் இ.கிருஸ்ணகுமார் சிறப்பு விருந்தினராகவும் கலந்து கொள்ளவுள்ளனர்.
இவ்விழாவில் கலை இலக்கிய நிகழ்வுகளுடன் 2024 ஆம் ஆண்டுக்கான தேசிய கலை இலக்கிய விழாவில் தேசிய மட்டத்தில் சாதித்தவர்களுக்கான கௌரவிப்பு, பிரதேச மட்ட தேசிய கலை இலக்கியப் போட்டிகளில் வெற்றியீட்டியோருக்கான பரிசளிப்பு ஆகிய நிகழ்வுகளும் நடைபெறவுள்ளன.


















