-ஞானத்தமிழ்-
சுழிபுரம் ஐக்கிய சங்க சைவ வித்தியாசாலையின் பரிசளிப்பு இன்று வியாழக்கிழமை முற்பகல் 10 மணிக்கு பாடசாலை மண்டபத்தில் அதிபர் சோ.ஜெயானந்தன் தலைமையில் நடைபெறவுள்ளது.
நிகழ்வில் சங்கானை கோட்டக் கல்விப் பணிப்பாளர் கு.ஒ.பெனின் றோஷான் பிரதம விருந்தினராகவும், சுழிபுரம் விக்ரோறியாக் கல்லூரி அதிபர் திருமதி க.சுலபாமதி மற்றும் சுழிபுரம் பொதுச் சுகாதாரப் பரிசோதகர் ச.கஜேந்திரன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும் பழைய மாணவியும் யாழ்ப்பாணம் மத்திய சுற்றாடல் அதிகார சபையின் பிரதேச சுற்றாடல் உத்தியோகத்தருமான திருமதி சி. திருச்செல்வி கௌரவ விருந்தினராகவும் கலந்து கொள்ளவுள்ளனர்.


















