2026 வரவு – செலவுத் திட்ட முன்மொழிவுகளின் இறுதி வரைவை பரிசீலிப்பதற்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நேற்று புதன்கிழமை இரவு ஜனாதிபதி செயலகத்தில் இணைந்துகொண்டார்.
நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெருமவும் இந்நிகழ்வில் கலந்துகொண்டார்.
தற்போதைய அரசாங்கத்தின் இரண்டாவது வரவு – செலவுத் திட்டம், நிதி திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் நாளை வெள்ளிக்கிழமை பிற்பகல் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.


















