-க.கனகராசா-
பருத்தித்துறை சித்திவிநாயகர் வித்தியாலய பரிசளிப்பு விழா இன்று சனிக்கிழமை முற்பகல் 9 மணிக்கு பாடசாலை வளாகத்தில் நடைபெறவுள்ளது.
வித்தியாலய முதல்வர் ப.சந்திரபாகு தலைமையில் நடைபெறும் இந்நிகழ்விற்கு முதன்மை விருந்தினராக வடமராட்சி கல்வி வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் செல்வி. செல்வகௌரி சேனாதிராஜா, சிறப்பு விருந்தினர்களாக வடமராட்சி கல்வி வலய அழகியல் பாட ஆசிரிய ஆலோசகர் அழகானந்தம் கிருஷ்ணானனந்தன் மற்றும் பருத்தித்துறை வேலும் மயிலும் அறக்கட்டளை பிரதம செயற்பாட்டு அதிகாரி தேவராசா சிவகுமாரசாமி ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர்.


















