உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 14 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இந்நோய் குறித்து விழிப்புணர்வூட்டுமுகமாக நடைபயணமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.
இந்த நடைபயணம் யாழ்.போதனா வைத்தியசாலை ஜே.ஐ.சி.ஏ.கட்டிட முன்றலில் காலை 6.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
இதில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு யாழ்.போதனா வைத்தியசாலையின் நீரிழிவு சிகிச்சை நிலையத்தினர் கோரியுள்ளனர்.


















