-ஞானத்தமிழ்-
வேலணை பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று சனிக்கிழமை முற்பகல் 11 மணிக்கு பிரதேச மட்ட கலை இலக்கிய பரிசளிப்பு விழா உதவிப் பிரதேச செயலாளர் க.பார்த்தீபன் தலைமையில் நடைபெறவுள்ளது.
வேலணை பிரதேச செயலகம் கலாசார அலுவல்கள் திணைக்களத்துடன் இணைந்து நடாத்தும் நிகழ்வில் வேலணைப் பிரதேச செயலர் த.அகிலன் பிரதம விருந்தினராக கலந்துகொள்ளவுள்ளார்.
இவ்விழாவில் பிரதேச மட்ட தேசிய கலை இலக்கியப் போட்டிகளில் வெற்றியீட்டியோருக்கான பரிசளிப்பு, கலை நிகழ்வுகள் என்பன நடைபெறவுள்ளன.


















