-ஞானத்தமிழ்-
வலிகாமம் வடக்குப் பிரதேச சபையின் உள்ளூராட்சி வார இறுதி நிகழ்வும், விருது வழங்கல் விழாவும் எதிர்வரும் நாளை செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணிக்கு பன்னாலை வரத்தலம் விநாயகர் திருமண மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
வலிகாமம் வடக்கு பிரதேச சபை தவிசாளர் சோ.சுகிர்தன் தலைமையில் நடைபெறவுள்ள இந் நிகழ்வில் யாழ்ப்பாண பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர் ப.பார்த்தீபன் பிரதம விருந்தினராகவும் தெல்லிப்பழை சுகாதார வைத்திய அதிகாரி வைத்திய கலாநிதி ப.நந்தகுமார் சிறப்பு விருந்தினராகவும் கலந்து கொள்ளவுள்ளனர்.


















