-முல்லைத்தீவில் எழுச்சி நாள் ஆரம்பம்-
-பா.சதீஸ்-
முல்லைத்தீவு கடலிலே காவியமான மற்றும் கரையோர மாவீரர்களுக்கு நேற்று திங்கட்கிழமை அஞ்சலி செலுத்தி மாவீரர் எழுச்சி நாள் அஞ்சலி நிகழ்வுகள் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
கரைதுறைப்பற்று பிரதேச சபையின் உறுப்பினர்களான தொ.பவுள்ராஜ், ம.குணசிங்கராஜா மற்றும் மாவீரர்களின் உரித்துடையோர், கரையோர மாவீரர் நாள் அமைப்பினர், பொதுமக்கள் எனப் பலரும் இந்த அஞ்சலி நிகழ்வில் கலந்துகொண்டனர்.
பல வருடங்களாக இப்பகுதியில் மாவீரர்களை நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்தப்பட்ட நிலையில், தற்போது கரைதுறைப்பற்று பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட சுற்றுலா தளமாக அப்பகுதி மாற்றமடைந்துள்ளதனால் பிரதேச சபையின் தவிசாளர், செயலாளர் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்களுக்கு இவ்வஞ்சலி நிகழ்வுகள் செய்வதற்கான அனுமதிக் கடிதங்களும் கரையோர மாவீரர் நாள் அமைப்பினரால் கையளிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


















